இன்று (19.09.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் ரூபாய் 3000.00 மதிப்புள்ள நுரையீரல் பரிசோதனை (மருத்துவ முகாம்) இலவசமாக நடைபெற உள்ளது. எனவே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.