27/08/2026 அன்று சென்னையில் நடைபெற்ற வருவாய் பெருக்கக் குழுவின் (Revenue Augmentation Committee) பங்குதாரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (AOBOA) சார்பில் விரிவான கோரிக்கை மனு குழுவின் தலைவர் Dr. மோன்டேக் சிங் அலுவாலியா அவர்களிடம் நேரில் வழங்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் முனைவர் அ. அன்பழகன் தலைமையில் அளிக்கப்பட்ட இக்கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்ட முக்கிய அம்சங்கள்: வரி சீரமைப்பு: சாலை வரி மற்றும் இதர வரிகளை நியாயமான முறையில் சீரமைத்தல். நடைமுறை எளிமை: வரி மற்றும் கட்டண செலுத்தும் முறைகளை எளிமைப்படுத்துதல். துறை வளர்ச்சி: அரசின் வருவாயை பாதிக்காமல் ஆம்னி பேருந்துத் தொழிலின் வளர்ச்சியை ஊக்குவித்தல். நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. M.A. சித்திக், IAS மற்றும் இணைச் செயலாளர் திரு. ராஜா கோபால் சுன்கரா, IAS உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், துறையின் கோரிக்கைகளை நேரடியாக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.