அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 03.04.2025 நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆம்னிப் பேருந்து உரிமையாளர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் : 1. இந்தியாவில் உள்ள நான்கு வழி, ஆறு வழி, எட்டு வழி என்ற மூன்று விதமான சாலைகளில் மத்திய மற்றும் மாநில சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளில் ஆம்னி பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள 1228 சுங்க சாவடிகளில் இருந்து கட்டண விலக்கு அளிக்க வேண்டும். . 2. இன்று இந்திய அளவில் பெருநகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் ஆம்னி பேருந்து பெரும் பங்காற்றி வருகிறது ஆனால் அந்த ஆம்னி பேருந்துக்கென்று தனி வகையான பர்மிட் இல்லாத காரணத்தால் பல இடையூறுகளை சந்திக்க வேண்டி உள்ளது ஆகையால் பயணிகள் போக்குவரத்தில் பெரும் பங்காற்றும் ஆம்னி பேருந்துகளுக்கு என்று புதிய வகை பர்மிட்டை மத்திய மாநில அரசுகள் பயணிகள் பயன்பெறு வகையில் உருவாக்கி வழங்க வேண்டும். 3. தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை பதிவு செய்வதற்கு குறைந்த அளவு ஒரு மாதம் காலம் ஆகிறது அதை மற்ற மாநிலங்கள் போல் ஒரே நாளில் பதிவு செய்து இயக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். 4.2021 மத்திய அரசு கொண்டு வந்த பேருந்துகளுக்கான ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட் டை தமிழக அரசு வரி இழப்பு என்று தவறான காரணத்தை சொல்லி பக்கத்து மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வரும் ஆம்னி பேருந்துகளை சிறை பிடிக்கிறார்கள் இதனால் மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து பாதிப்படைகிறது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் அனுமதிக்கும் ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட் பேருந்துகளை தமிழகத்திலும் அனுமதிக்க வேண்டும். 5. தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு வருடத்துக்கு சாலை வரி ரூபாய் ஆறு லட்சம் மேல் செலுத்தும் போது., தமிழகத்தில் இயங்கும் எந்த வகை பேருந்துகளுக்கும் இல்லாத அளவு அபராத கட்டணமாக ஒரு லட்சத்துக்கு மேல் செலுத்த வேண்டி உள்ளது. ஆகையால் தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு தேவையில்லாமல் விதிக்கும் அபராத கட்டணம் விதிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும். 6. போக்குவரத்து துறையில் உள்ள வாகனங்களுக்கான சேவைகள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் தங்கு தடையின்றி விரைவாக இணைய வழியில் செய்ய வழிவகை செய்ய வேண்டும். 7. தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பணியாளர்கள் பற்றாக்குறையால் சேவை குறைபாடு ஏற்படுகிறது ஆகையால் பிற மாநிலங்கள் போல் எல்லையில் உள்ள மோட்டார் வாகன செக்போஸ்ட்களை அகற்றி அந்த பணியாளர்களை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு மாற்றி விரைவான சேவை வழங்க வழிவகை செய்ய வேண்டும். 8. வாகனங்களுக்கு போக்குவரத்து துறை சார்பிலோ அல்லது காவல்துறை சார்பிலோ அபராதம் விதிக்கும் பொழுது வாகனங்கள் மீதே அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் ஓட்டுனர்கள் செய்யும் குற்றங்கள் சாலை விதிமீறல்கள் குறைந்தபாடில்லை ஆகையால் இனி வரும் காலங்களில் ஓட்டுநர் செய்யும் போக்குவரத்து விதி மீறல்களுக்கு ஓட்டுநர் உரிமம் மீது மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும். 9. வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகைகள் சில, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது அதை முற்றிலும் ஒழித்து ஆன்லைனில் மட்டுமே செலுத்த ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும். 10. பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கென்று பயணிகள் சேவையை விரைவாக செய்ய சுங்க சாவடிகளை அகற்றும் வரை, சுங்க சாவடிகளில் பேருந்துகளுக்கான தனி வழிகளை ஏற்படுத்த வேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்.