ஆம்னி பேருந்து பயணிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பயணிகளுக்கு உதவும் நோக்கில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் கட்டப்பட்ட AOBOA MOTEL பேருந்து நிலையம் (18.12.2024) புதன்கிழமை அன்று மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் திரு எஸ் எஸ் சிவசங்கர் அவர்களால் திறக்கப்பட்டது மற்றும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் A.J மணி கண்ணன் அவர்களும், விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு அன்னியூர் சிவா அவர்களும் கலந்து கொண்டனர். உளுந்தூர்பேட்டை டோல்கேட்டிற்கு 6 கிமி முன்பு தேசிய நெடுஞ்சாலையில் 6 ஏக்கரில் ஆம்னி பேருந்து பயணிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பயணிகள் பயன் பெறும் வகையில் சர்வதேச தரத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 500 பேருந்துகள் மற்றும் 10,000 பயணிகளை கையாளும் அளவிற்கு விசாலமாக கட்டப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் , பெண்கள், ஊனமுற்றோர் மற்றும் மூன்றாம் பாலினத்தோர் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் சர்வதேச தரம் வாய்ந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து பராமரிப்பிற்க்காக 12 டிராவல்ஸ் அலுவலகங்களும், ஆம்னி பேருந்துகள் 24 மணி நேரமும் பராமரிக்க 2 Mechanic Shop, 1 Electrical Shop, 2 AC Mechanic Shop, 1 Tyre Shop and Diesel Bunk ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. 20000 சதுர அடியில் சைவ உணவகம் மற்றும் 1500 சதுர அடியில் நவீன தேநீர் நிலையமும் ஒரே நேரத்தில் 100 பேருந்திற்கு மேல் நிறுத்தும் வசதி கொண்ட பேருந்து நிறுத்தங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் வசதியும் உள்ளது. கார்கள் மற்றும் பேருந்துகள் சார்ஜ் செய்யும் EV Charging Station ஆகியவை விரைவில் துவங்கப்பட உள்ளது. முன்புறம் 150 சதுர அடியில் 15 கடைகளும், 300 சதுர அடியில் ஆறு கடைகளும் இதர பயன்பாட்டுக்காக கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு ISO 9001 தரச் சான்றும், இங்குள்ள கேசினோ டீ பாயிண்ட் தேநீர் நிலையத்திற்கு ISO 22000 - உணவுப் பாதுகாப்பு மேலாண்மைக்கான சான்றிதழும் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் வசதிகளை அதிகரிக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு திரு. நித்தின் கட்காரி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்சபர் திட்டத்தை மையமாகக் கொண்டு நெடுஞ்சாலைத் துறைக்கு உதவும் வகையில் கடந்த ஒரு வருட காலமாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் இந்த AOBOA - MOTEL மூலம் எங்கள் சங்கத்திற்கு வருமானம் ஈட்டுவது எங்கள் நோக்கமல்ல மாறாக பயணகளுக்கு தரமான உணவு, சுத்தமான இலவச கழிப்பறை மற்றும் தூப்மையானசுற்றுச்சூழல் ஆகியவற்றை வழங்குவது மட்டுமே என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்